நரை முடிக்கு இயற்கையான டை

நரை முடிக்கு இயற்கையான டை
நரை முடியோ, இள நரையோ, பார்க்க அழகை தருவதில்லை. கெமிக்கல் கலந்த டை உபயோகிப்பதால் நிறைய கெடுதல்கள் வர வாய்ப்புண்டு. இயற்கையாக டை நீங்களே தயாரிக்க முடியும். வீட்டிலேயே முயன்று பாருங்கள். நிச்சயம் பலன் அளிக்கும். கெடுதல் தராது. பக்க விளைவுகளும் இல்லை.

திரிபலாதி சூரணம் :

ஆயுர் வேத கடைகளில் திரிபலாதி சூரணம் கிடைக்கும். அதனை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.
அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். நன்றிகள் 

Comments

Popular posts from this blog

பத்ரகாளி மந்திரம்

ஐஸ்வர்யங்களை வரவழைக்கும் தூபம்!

தலைமுடி உதிர்வு, வெள்ளை முடி, பொடுகு, மீண்டும் முடி வளர ஒரே தீர்வு